தாமரைக்கு ஓட்டு போட்டால் மத்திய அரசு திட்டங்கள் வீடு தேடி வரும் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
கோவை :
தமிழகத்தில் இன்னும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி கடுமையாக விமர்சனம் செய்து வாக்குகளை சேகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசமும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேரடியாக போட்டியிடுகின்றனர். இதனால் யாரு வெற்றி பெறுவார்கள் என்று பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆர்வமாய் காத்துக்கொண்டிருக்கின்றனர். தற்போது பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக நடிகை நமீதா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அவர் கூறியதாவது ;
Read more – காரில் செல்லும்போது மட்டுமே நான் அமைச்சர்… மற்ற நேரத்தில் நானும் சராசரி மனிதனே… செல்லூர் ராஜு
கடவுள் நம்பிக்கையுள்ள பூமியில் கடவுள் நம்பிக்கை இல்லாத கமல்ஹாசனை நம்பி எப்படி ஓட்டு போடப்போகிறீர்கள். உங்கள் சகோதரியான வானதி சீனிவாசனை வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள். தாமரைக்கு சின்னத்திற்கு வாக்களித்தால் மத்திய அரசின் அனைத்து திட்டங்கள் வீடு தேடி வரும். தாமரை மலரும், தமிழ்நாடு வளரும் என்று தெரிவித்தார்.