அமைச்சர் எம்.சி.சம்பத் உறவினருக்கு சொந்தமான இடங்களில் கணக்கில் வராத ரூ.11 கோடியை வருமான வரி துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை :
தருமபுரியில் அமைச்சர் எம்.சி.சம்பத்தின் சம்பந்தி இளங்கோவன் நடத்திவரும் பள்ளி மற்றும் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் கடந்த 26 ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை வேட்டையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.
Read more – தமிழகத்தில் மீண்டும் ஒரு வேட்பாளருக்கு கொரோனா தொற்று.. கொரோனாவின் ஆதிக்கம்.. அரசியலை பாதிக்குமா ?
மேலும், இதுவரை கணக்கில் வராத வகையில் 9 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், நேற்று இளங்கோவனுக்கு சொந்தமான டி.என்.சி நிறுவனத்தில் மேலும் இரண்டு கோடியை வருமான வரிதுறையினர் கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து, தர்மபுரியில் உள்ள வீடு மற்றும் சென்னையில் உள்ள நிதி நிறுவன அலுவலகம் என மொத்தம் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளனர்.