உலகில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் 70 சதவீதம் இந்தியாவில் இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
உலக புலிகள் தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புலிகள் கணக்கெடுப்பு அறிக்கையை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அப்போது, அவர், ‘1973 ஆம் ஆண்டு இந்தியாவில் 9 புலிகள் காப்பகம் இருந்ததாகவும், தற்போது 50 புலிகள் காப்பகங்கள் இருப்பதாகவும் கூறினார். உலகில் 13 நாடுகளில் மட்டுமே தற்போது புலிகள் காணப்படுவதாகவும், இந்த நாடுகளில் புலிகளைப் பாதுகாக்க முன்வரும் மக்களுக்கு பயிற்சி அளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் உலக அளவில் இருக்கும் புலிகளில் இந்தியாவில் 70 சதவீதப் புலிகள் உள்ளது என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.