மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று சனிக்கிழமை தேதி 10.04.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 9.00-10.30, எமகண்டம் காலை 1.30-3.00 இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
உறவினர் வழியில் சுபசெய்திகள் காதில் வந்து சேரலாம். இன்றைய நாளை பொறுத்தவரை பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கடன் பிரச்சினைகள் குறைய சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது. பிறரிடம் பொறுப்பை கொடுக்காமல் தானாய் முன் நின்று செயல்படுவது நல்லது.
ரிஷபம் :
உடல் ஆரோக்கிய பாதிப்புகள் சீராகும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் கொண்டுவர வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மனைவி வழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
மிதுனம் :
குடும்பத்தில் தாராள பண வரவும், மகிழ்ச்சியும் உண்டாகும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.
கடகம்:
பொது காரியங்களில் ஈடுபடும் போது அடுத்தவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.தொடர் பயணம் செய்வதற்கான அதிக வாய்ப்புகள் ஏற்படும்.நண்பர்களின் உதவி இன்று உங்கள் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கும்.
சிம்மம்:
வேலை பார்க்கும் நிறுவனத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.பெரியவர்களின் ஆசீர்வாதம் கைகூடும்..வாகன போக்குவரத்துகளில் கவனமாய் இருத்தல் நல்லது.கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுத்துச் சென்றால் இல்லற வாழ்க்கை நலம் பெரும்
கன்னி:
நண்பர்கள் மற்றும் குடும்ப உறவுகளின் மூலமாக நன்மைகள் ஏற்படும்.நிலம் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.வேலை பார்க்கும் நிறுவனங்களில் நல்ல பெயர் கிடைக்கும்.நண்பர்களுடன் ஏற்படும் பேச்சுவார்த்தையை பொறுமையுடன் கையாள்வது நல்லது.
துலாம்:
பூர்விகம் சம்பந்தமான சில சொத்து வகைகளில் ரத்த சொந்தங்களிடையே இடையே வாக்குவாதங்கள் ஏற்படும்.செலவுகள் அதிகரித்தாலும், எதிர்பார்த்தபடி வரவு வந்து சேரும்.நிதி மற்றும் வரவு செலவு கணக்குகளில் கவனம் தேவை.
விருச்சிகம்:
உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்படும்.வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட்டு மனநிறைவாய் காணப்படுவீர்கள்.தந்தைவழி உறவினர்களால் சில எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும்.வேலையில் முன்னேற்றங்கள் கருதி சில பயணங்களை மேற்கொள்வீர்கள் .
தனுசு:
புது முயற்சிகளை இன்று செயல்படுத்தாமல் இருப்பது நல்லது.வேலை பார்க்கும் நிறுவனத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள்.வேலையில் உயரதிகாரிகளின் பாராட்டுக்கும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக காணப்படும்
மகரம்:
வாகன பராமரிப்பு செலவு கூடும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலையாக காணப்படும்.குழந்தைகளின் முன்னேற்றத்தில் அதிகம் கவனம் செலுத்தி சில செலவுகள் ஏற்படலாம்.பண விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
கும்பம்:
நிலம் சம்பந்தமான விஷயங்களில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது.வாகன போக்குவரத்துகளில் கவனமாய் இருத்தல் நல்லது.படிக்கும் மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவார்கள்.மனதில் தோன்றும் தேவை இல்லாத அழுத்தங்களை தவிர்த்தல் நல்லது.
மீனம்:
திடீர் பயணங்களால் வாழ்வில் நன்மைகள் ஏற்படும்.தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.கணவன் மனைவியிடையே மகிழ்ச்சி மேம்படும்.சில பண விஷயங்களில் நேர்த்தியாய் கையாண்டு சேமிப்பை தக்கவைத்து கொள்வீர்கள்.