மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்ததை தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 3 ம் தேதி மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ஹூக்ளி மாவட்டம் தாரகேஷ்வரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் வெவ்வேறு கட்சிகளுக்கு ஓட்டு போட்டு, தங்கள் ஓட்டுகள் பிரிய வழிவகுக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்தார்.
Read more – உயர்கல்வி நிறுவனங்களில் வன்னியர்களின் இடஒதுக்கீட்டை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு..
இதையடுத்து, மம்தா மத அடிப்படையில் பேசி சிறுபான்மையினர் மக்களின் ஓட்டுக்களை பிரிக்க முயற்சி செய்ததாக தேர்தல் ஆணையத்தில் பாஜகவினர் புகார் அளித்தனர். மம்தா பானர்ஜியின் பேச்சானது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இருப்பதால் இதுகுறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், எத்தனை நோட்டிஸ் அனுப்பினாலும் நான் மத ரீதியாக பேசவில்லை என்று மம்தா தெரிவித்தார். இருந்தும் இதை ஏற்காத தேர்தல் ஆணையம் மம்தா பானர்ஜி பரப்புரை மேற்கொள்ள தடைவிதித்தது.
தற்போது இந்த தடையை எதிர்த்து மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள காந்தி மூர்த்தியில் இன்று நண்பகல் 12 மணிக்கு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.