Friday, March 6, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home இந்தியா

அம்பாலா விமானப்படை தளத்தில் தரையிறங்கின ரஃபேல் போர் விமானங்கள்

July 29, 2020
பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானங்களில், முதல்கட்டமாக 5 போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தன.

இந்திய விமானப்படைக்கு பிரான்சில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2016-ம் ஆண்டு இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படும் இந்த விமானங்களை, பிரான்சின் டசால்ட் நிறுவனம் தயாரித்து வழங்கும்.

தாக்குதல் ரகத்தைச் சேர்ந்த இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் ஆகும். அவற்றிலும் பிற விமானங்களில் இருப்பதுபோன்ற அனைத்து அம்சங்களும் இருக்கும். இந்த 36 விமானங்களும் அடுத்த ஆண்டு (2021) இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் விதியாகும். இதில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இவற்றை முறைப்படி பெற்றுக்கொள்வதற்காக கடந்த அக்டோபரில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்றிருந்தார்.

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

இந்த 10 விமானங்களில், 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்சிலேயே இருக்கும் நிலையில், மீதமுள்ள 5 விமானங்கள் முதல் பிரிவாக இந்தியா புறப்பட்டன.  நேற்று முன் தினம் (ஜூலை 27)  பாரீசில் இருந்து இந்தியாவை நோக்கி தனது பயணத்தை  தொடங்கிய ரஃபேல் விமானங்கள், இந்தியா-பிரான்ஸ் இடையேயான 7 ஆயிரம் கி.மீ. தூரத்தை வெற்றிகரமாக கடந்து, இன்று பிற்பகலில் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன. இந்திய வான்பரப்புக்குள் நுழைந்ததும் சுகோய் எம் 30 ரக போர் விமானங்கள் அழைத்து வந்தன.  இந்த விமானங்கள் சுமார்  3 மணியளவில் ஹரியானாவின், அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்தில் கம்பீரமாக தரையிறங்கியது. அங்கு, தரையிறங்கிய விமானங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தண்ணீர் பீய்ச்சி அடித்து ரஃபேல் போர் விமானங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

 ரஃபேல் போர் விமானங்கள் நமது ராணுவ வரலாற்றில் புதிய சகாப்தம் என்று  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

The Birds have landed safely in Ambala.

The touch down of Rafale combat aircrafts in India marks the beginning of a new era in our Military History.

These multirole aircrafts will revolutionise the capabilities of the @IAF_MCC.

— Rajnath Singh (@rajnathsingh) July 29, 2020

விமானத்தின் சிறப்பம்சங்கள்

15.30மீ. நீளம், 10.90மீ. அகலம், 5.30மீ. உயரம் கொண்டது.ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் சுமார் 3,700 கி.மீ. தூரம் வரை பயணிக்கும் ஆற்றல் பெற்றது.ரஃபேல் விமானம் பறக்கும் போதே, வானிலேயே எரிபொருளை நிரப்பிக் கொள்ள முடியும்.இந்த நவீன போர் விமானங்கள் மிக முக்கியமான ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் பெற்றவை. 9 டன் எடையுள்ள ஆயுதங்களை எடுத்து சென்று தாக்க முடியும்.இரட்டை இன்ஜீன் கொண்ட இந்த விமானங்களை போர்க்கப்பல்களில் எளிதாக தரையிறக்க முடியும். கடும் குளிரிலும் இயக்க முடியும்.

Bordeaux: A view of Rafale Jet at its Dassault Aviation assembly line, in Bordeaux, France, Tuesday, Oct. 8, 2019. Rajnath Singh is in the city for the handover ceremony of the first Rafale combat jet acquired by the Indian Air Force. (PTI Photo) (PTI10_8_2019_000158B)

மேலும்,முக்கியமான ஏவுகணைகளை சுமந்து செல்வது மட்டுமின்றி, இந்தியாவுக்காக மேலும் சிறப்பான முறையில் பல மாற்றங்கள் இந்த போர் விமானத்தில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரேடார் எச்சரிக்கை வாங்கிகள், ஜாமர்கள், 10 மணிநேர விமான தரவு பதிவு, தேடுதல் மற்றும் வழிகாட்டி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த விமானங்களில் அடங்கி உள்ளன.

அம்பாலா மக்கள், இன்று இரவு 7:00 மணி முதல் 7:30 மணி வரை, வீடுகளில் மெழுகுவர்த்தி ஏற்றி, ரபேல் போர் விமானங்களை வரவேற்குமாறு, அம்பாலா நகர, பா.ஜ., எம்.எல்.ஏ., அசீம் கோயல், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்பாலாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானப்படை தளத்தின் சுற்று வட்டார பகுதிகளில், ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் இயக்கவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

Next Post

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்தப்பட்டார் ஆளுநர் மாளிகை அறிவிப்பு

Next Post

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனிமைப்படுத்தப்பட்டார் ஆளுநர் மாளிகை அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version