பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

எளிய மக்களும் அன்றாடம் பயன்படுத்தத் தேவையான பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு போன்றவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்த விலையுயர்வு சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதளவில் பாதித்துள்ளது.
அந்த வகையில், பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்துள்ளது. சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவர்கள் பெட்ரோல், டீசல் விலையுயர்வை கண்டித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலைகள் உயர்ந்து விட்டன. பண்டிகை உணர்வு மங்கி விட்டது. மோடி அவர்களுக்கு நன்றி.’ என பதிவிட்டுள்ளார்.




