சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க ஒரு சென்டிமெண்ட் படமாக உருவாகியுள்ளது. இருப்பினும் ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அண்ணாத்த திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் நான்கு நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த பாடலை மறைந்த முன்னணி பாடகர் எஸ்பிபி பாடியிருந்தார். 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில் சாரகாற்று என்ற அண்ணாத்த படத்திலிருந்து இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. தற்போது சொன்ன நேரத்திற்கு சாரல் சாரல் காற்றே என்ற மெலோடி பாடல் வெளியாகியுள்ளது. சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் பாடல் இதோ…




