வீட்டிற்காக வாங்கிய ஒரு கோடி ரூபாய் கடனை செலுத்தாமல் இழுத்தடித்து வந்த மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டதும், அதிகாரிகளிடம் மதுவந்தி கெஞ்சி கூத்தாடியதும் தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி.

சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா என்ற அப்பார்ட்மென்ட்டில் ஒரு பிளாட்டை வாங்கியுள்ளார் பிரபல நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகளும், பாஜக செயற்குழு உறுப்பினருமான மதுவந்தி. பல வருடங்களாக அங்கு வசித்து வரும் அவர், அந்த வீட்டை வாங்குவதற்காக 2016-ல் இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார். வீட்டை வாங்கிய பிறகு சில மாதங்கள் மட்டும் வட்டி கட்டி வந்த அவர், அதன் பிறகு வட்டியும், தவணையும் கட்டவில்லையாம்.
உரிய வட்டி பணத்தை கட்டுமாறு, பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் பல மாதங்களாக மதுவந்தியிடம் கேட்டும் அவர் பணத்தை கட்டாததால், நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதனையும் கண்டு கொள்ளாததால், அவர் மீது நிதி நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு, நீதிமன்றம் வீட்டை சீல் வைக்க உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சீல் வைக்க வந்த அதிகாரிகளிடம் காலில் விழுந்து கெஞ்சி கேட்கிறேன் என் மானமே போய் விடும் என் மன்றாடினார்.
இத்தனை விஷயங்கள் நடந்தும் கூட, இவை எதுமே நடக்கவில்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறார் மதுவந்தி. இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகள் எல்லாம் பொய். அதை எல்லாம் உடனே நிறுத்துங்கள். எனக்கு அதிர்ச்சியாக, கோபமாக இருக்கிறது. இது தொடர்பாக பொய்யான செய்திகள் வெளியாகி வருகிறது என்று கோபமாக பதில் அளித்துள்ளார்.
அப்போ அதிகாரிகளின் காலில் விழுந்த அந்த பெண் யார் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.




