முல்லை பெரியாறு அணையின் பழுதுகளும் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டது; பாதுகாப்பு சார்ந்த பேச்சுக்கு இனி இடமில்லை என மத்திய அரசு குழு உச்சநீதிமன்றம் நிகவர அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி,
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மையை சுட்டிக்காட்டி அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. கடந்த 8ம் தேதி இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்ய சர்வதேச நிபுணர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் இவ்வேலைகளில் அனைத்து விஷயங்களும் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும் வாதங்களை வைத்தார்.
ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ! முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து இந்திய நிபுணர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? நீங்கள் சொல்லக்கூடிய சர்வதேச நிபுணர்களுக்கு இணையாக இந்திய நிபுணர்களும் நிபுணத்துவம் கொண்டவர்கள்தான்! மேலும், நீங்கள் சொல்லக்கூடிய விஷயங்களை எல்லாம் ஒரே நாளில் செய்து முடிக்கக் கூடிய காரியமல்ல என கூறினர். இதனை அடுத்து முல்லை பெரியாறு அணையின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையினை கண்காணிப்புக்க வரும் 21ம்தேதிக்குள் தாக்கல் செய்ய அணை கண்காணிப்பு குழுவிற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அக்டோபர் 25-ஆம் தேதிக்கு ஒத்திவத்தனர்.
இந்நிலையில், முல்லை பெரியாறு அணையை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்ட மத்திய அரசு குழு நிலாவரை அறிக்கையை இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், முல்லை பெரியாறு அணைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யப்பட்டு விட்டது. குறிப்பாக அணைக்கான மதகுகள், கதவுகள் என நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள தேவைகளும்! பழுதுகளும்! சரிசெய்யப்பட்டு விட்டது. இருப்பினும் இன்னும் ஒரு சில சிறுசிறு வேலைகள் உள்ளது, அவை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்துவிடும் என தெரிவித்துள்ளனர். மேலும், அணையின் பாதுகாப்பு சம்மந்தமாக பேச இனி எதுவும் இல்லை எனவும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலவர அறிக்கையில் மத்திய அரசின் குழு தெரிவித்துள்ளது.
ஆகவே இவ்வழக்கு மீண்டும் 25ம் தேதி உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளும் போது வழக்கின் அடுத்தகட்ட நிலவரம் தெரியவரும்.