44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஒலிம்பிக் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது.
நாளை (28.07.2022) செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கவுள்ளது. ஆகஸ்டு 10 வரை நடைபெறும் இப்போட்டியின் தொடக்கவிழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு துவக்கி வைக்க இருக்கிறார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்
இந்த நிலையில், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஒலிம்பிக் ஜோதி மாமல்லபுரம் வந்தடைந்தது. அதற்கு தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மாமல்லபுரம் வண்ண அலங்காரங்களால் காட்சியளிக்கிறது. வெளிநாட்டு பயணிகள் வந்த வண்ணம் இருப்பதால் அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் பூஞ்சேரி பகுதியில் மட்டும் 6,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 300க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.30 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன.
-பா.ஈ.பரசுராமன்.




