உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. உலகின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் இந்தியாவுக்கு மட்டும் 23%பங்கு இருப்பதாக கூறியுள்ளது.
1950-1951 காலக்கட்டத்தில் இந்தியாவின் பால் உற்பத்தி 17 மில்லியன் டன்னாக இருந்தது. 2020-2021ம் ஆண்டில் 209.96 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.இந்தியாவில் ஒரு நபருக்கு தினமும் 427 கிராம் பால் கையிருப்பில் இருந்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், முட்டை உற்பத்தியும் மீன் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 2019-2020ம் ஆண்டில் முட்டை உற்பத்தி 114383 மில்லியன் டன்னாகவும், மீன் உற்பத்தி 14070 ஆயிரம் டன்னாகவும் உயர்ந்துள்ளது.
-பா.ஈ.பரசுராமன்