பாம்பு கடித்து உயரிழந்த அண்ணனின் இறுதிசடங்கில் பங்கேற்கச் சென்ற தம்பியையும் பாம்பு கடித்து இறந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் கோவிந்த் மிசாரா (22) என்பவர் தன்னுடைய சகோதரர் அரவிந்த் (38) இறுதிசடங்கில் பங்கேற்க பவானிபூர் கிராமத்திற்கு சென்றார். (அரவிந்த் கடந்த செவ்வாய்க்கிழமையன்று பாம்பு கடித்து இறந்து போனார்)
இந்நிலையில், இறுதிசடங்கு முடிந்து தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் போது கோவிந்த மிசாரா மற்றும் அவரது உறவினரை பாம்பு கடித்தது. இதில் அவரது உறவினர் பிழைத்துக் கொண்டார். ஆனால், கோவிந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து மருத்துவ மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். உள்ளூர் எம்எல்ஏ சுக்லாவும் நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.




