மனைவியை பிற பெண்களுடன் ஒப்பிடுவது மனக்கொடுமைக்குச் சமம் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுமார் 12 ஆண்டுகளாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், குடும்பநல நீதிமன்றம் வழங்கிய விவாகரத்தை எதிர்த்து கணவர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனைவியை தனக்கு சரியான இணை இல்லை என்று கூறுவது, மனைவியை பிற பெண்களுடன் ஒப்பிடுவது போன்றவை மனக்கொடுமைக்குச் சமம். இதை கணவர் வேண்டுமென்றே செய்திருக்கிறார். இந்த திருமண பந்தம் நீடிக்க வேண்டும் என்பதில் அவருக்கு நல்ல நோக்கம் இல்லை என்பது விசாரணையில் தெரிய வருகிறது. மேலும், அவரது கோரிக்கைகளுக்கு எதிராகவே ஆதாரங்கள் இருக்கின்றன என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.