தமிழக அரசில் காலியாக உள்ள 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)வெளியிட்டுள்ளது.

Senior Lecturers :24
Lecturers : 82
Junior Lecturers :49
கல்வித்தகுதி: தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் போன்ற ஏதாவதொரு பாடங்களில் 50 % மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டமும், குறைந்தது 55% மதிப்பெண்களுடன் எம்.எட் பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் ஒரே பாடத்தில் படித்திருக்க வேண்டும்.
முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 31.07.2022 தேதியின் படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு & சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ₹500 (எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் ₹250) கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கு முறை: விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.




