சென்னையில் மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு அம்பேத்கர் மற்றும் வாஜ்பாய் பெயரை சூட்ட வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வகுத்தவர் அம்பேத்கர். அதேபோல, இந்தியாவின் போக்குவரத்து, நவீன தொழில்நுட்பம், கல்வித்துறை, பாதுகாப்புத்துறை, விவசாயத்துறை என பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களை கொண்டு வந்தவர் வாஜ்பாய். அவருடைய ஆட்சியில்தான் இந்தியாவில் முதன்முதலாக மெட்ரோ சேவை தொடங்கப்பட்டது.
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறது. சென்னையில் முக்கிய பகுதிகள் அனைத்தும் மெட்ரோ சேவையில் இணைக்கப்பட்டு மக்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
சென்னை பாரிமுனை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு அம்பேத்கர் பெயரையும், சென்னை விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வாஜ்பாய் பெயரையும் மற்ற மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு சுதந்திரத்திற்காக பாடுபட்டு, தியாகங்கள் புரிந்த தமிழக தலைவர்களின் பெயர்களையும் சூட்ட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.