சந்திரன் நம் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தை எப்போதும் பிடித்துள்ளது. கடல் அலைகளை கட்டுப்படுத்துவது சந்திரன் தான். பூமியின் சாய்வுத்தன்மையை உறுதிப்படுத்துவது சந்திரன் தான். 450கோடி ஆண்டுகளுக்கும் மேலாக பூமியுடன் இருப்பதாக கருதப்பட்டு வந்தது சந்திரன். ஆனால் அவை நாம் நினைத்தை விட குறைந்த வயதுடையது என்பது தெரியவந்துள்ளது. சமீபத்திய ஆய்வில் சந்திரனின் வயது குறித்த முந்தைய மதிப்பீடுகளில் இருந்து சில கோடி ஆண்டுகள் குறைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் விண்வெளி மையத்தின் விஞ்ஞானிகள் சந்திரனின் மாக்மா(magma) கடல் எவ்வளவு ஆண்டுகளாக உருகிய நிலையிலேயே இருந்தது என ஆராய்ந்தனர். நாம் முன்பு நினைத்ததை விட கிட்டத்தட்ட 8.5 கோடி ஆண்டு இளையது என்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சந்திரன் பூமி உருவாகியதன் முடிவில் தோன்றியதாக தெரிவித்துள்ளனர்.
சந்திரன் எவ்வாறு உருவாக்கப்பட்டது?
பல விஞ்ஞானிகள் கூறும் கூற்று இது தான். சுமார் 4.51 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமி வெப்பமாக இருந்தது. வேகமாக மாறிக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில், பூமி தியா (theia) என்ற சிறு கொளுடன் (Pro Planet) மோதியது. இதனால் பூமியிலிருந்து பெரிய கல் ஒன்று சிதறி பூமியை சுற்ற ஆரம்பித்தது. 2000ஆண்டுகளில் இது நமது பூமியின் இயற்கை செயற்கைக்கோளான
சந்திரனாக மாறியது.
சூடான பாறை ஒன்றாக திரண்டதன் விளைவாக ஏற்பட்ட ஆற்றல், புதிய சந்திரனின் மேற்பரப்பில் மாக்மா கடலை உருவாக்கியது. அது இறுதியில் படிகமாகி இன்றிருக்கும் சந்திரனின் மேற்பரப்பாக மாறியது.
சந்திரனின் வயது கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
அப்பல்லோ மற்றும் சோவியத் லூனா ரோபோடோடிக் பயணங்களில் சந்திரனின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆனால் அவற்றின் மூலம் சந்திரனின் சரியான வயதை கணிக்க முடியவில்லை. எனவே விஞ்ஞானிகள் பல்வேறு முறைகளை கையாள தொடங்கினர்.
தற்போது கணினி மென்பொருளின் உதவியால் மக்மா கடல் குளிர இவ்வளவு காலம் ஆகும் என கணித்த விஞ்ஞானிகள் குழு இந்த புதிய வயதை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.