பணியாளர் தேர்வு ஆணையம் மற்றொரு பெரிய வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் உள்ள பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு பட்டப்படிப்பு முடித்த 18 – 32 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கான மாத ஊதியம் ரூ.25,500 முதல் ரூ.1,51,100 வரை வழங்கப்படும். மேலும் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 3 முதல் மே 3 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை அணுகவும்.