BEML Limited நிறுவனத்தில் காலியாகவுள்ள டிப்ளமோ பயிற்சியாளர்கள், அலுவலக உதவியாளர் பயிற்சியாளர்கள், கணக்கு உதவி பயிற்சியாளர்கள், உதவி அதிகாரி, அதிகாரி, உதவி மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 68 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு Diploma, Bachelor’s Degree, CA/ICWA, Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்களின் வயதுவரம்பு 34 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் மாத ஊதியமாக ரூ.30,000 முதல் ரூ.1,30,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க மே 1ம் தேதி இறுதி நாளாகும். மேலும் இதுகுறித்து கூடுதல் விவரங்களை அறிய https://www.bemlindia.in என்ற இணையதளத்தை அணுகவும்.