சீனாவில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு நுரையீரல் சேதமடைந்திருப்பது ஆய்வில் தெரியவந்திருக்கிறது இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவிலுள்ள வூகான் நகரில் தான், முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பரவ தொடங்கிய கொரோனா நோய் பரவல் உலகம் முழுவதையும் ஆட்டி புடைத்துக்கொண்டு இருக்கிறது.
இதனிடையே, அங்கு கொரோனாவில் இருந்து மீண்ட,சராசரியாக 59 வயதுள்ள 100 பேரை வூகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனை கடந்த ஏப்ரல் மாதம் முதல் கண்காணித்து வந்தது.
ஜூலை மாதத்துடன் முடிந்த முதற்கட்ட முடிவில், இந்த 100 பேரில், 90 பேரின் நுரையீரல் சேதமடைந்திருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் நுரையீரலில் நடக்கும் சுவாச பரிமாற்றங்கள் நல்ல செயல்பாடுள்ள நபரைக்கொண்டு ஒப்பிடும் போது அவர்களின் நுரையீரல் செயல்பாடு குறைவாகவே இருந்தது தெரியவந்துள்ளது.சராசரியாக நுரையீரல் செயல்பாடு உள்ள நபர் 6 நிமிடத்தில் 500 மீட்டர்களை நடந்து கடக்க முடியும் ஆனால் இவர்களால் 400 மீட்டர் மட்டுமே கடக்க முடிகிறது இந்த ஆய்வு கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளை பீதி அடையச்செய்துள்ளது.