வைட்டமின் சி நிறைந்த காய்கறிகளை நாம் உட்கொள்வதால் நம் உடல் மட்டுமல்ல சருமமும் ஆரோக்கியம் பெருகிறது.எனவே வைட்டமின் சி நிறைந்த புதினா மற்றும் வெள்ளரிக்காய் பயன்படுத்தினால் சருமம் பொலிவுடன் காணப்படும்.
நம் சருமத்திற்கு நீர்சத்து சரியாக கிடைத்தாலே முகம் பொலிவுடனும்,புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.அவ்வாறு முகம் பொலிவு என்னென்ன செய்யலாம் என்பதை இனி பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் – சிறிய அளவு
புதினா – ஒரு கைபிடி அளவு (ஃரெஷ்ஷான இலைகள்)
செய்முறை
ஒரு சிறிய வெள்ளரிக்காயை எடுத்து அதன் தோலை சீவிக்கொள்ளவும்,பின்பு அதனுடன் சிறிதளவு புதினாவை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.நீர் சேர்க்க தேவையில்லை,ஏனெனில் வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்த காய்.இந்த இரண்டையும் மைய அரைத்து, அந்த விழுதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தேய்த்து 20-30 நிமிடம் ஊற வைக்கவும்.பின் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.இவ்வாறு வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள கெட்ட அழுக்குகள் நீங்கி முகத்திற்கு நிரந்திர வெண்மை கிடைக்கும்.