கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் உள்ள அனைத்து பொது விசாரணை கவுண்ட்டர்கள் மூடப்பட்டு உள்ளன.
இருந்தாலும், நிலுவையில் உள்ள அவசரமான பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் ஸ்கைப் (SKYPE) வீடியோகால் மூலம் அணுகும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி நேற்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில், நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்ள, விண்ணப்பதாரர்கள், அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை, Re-g-i-o-n-al Pass-p-ort Of-f-i-ce Ch-e-n-n-ai என்ற ‘ஸ்கைப்’ முகவரியில் தொடர்புக்கொள்ளலாம்.
இந்த ஸ்கைப் வீடியோ கால் வசதிகள் பொதுவான விசாரணைகளுக்கு பொருந்தாது. இது மிகவும் அவசரதேவைக்கான விசாரணைக்கு மட்டுமே ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பொது பாஸ்போர்ட் தொடர்பான தகவல்களுக்கு18002581800 என்ற இலவச அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம். rpo.ch-e-n-n-ai@mea.gov.in என்ற மின்னஞ்சல்(email) முகவரிக்கும் தகவல் அனுப்பலாம்.
மேற்கண்ட தகவல் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.