Bits Vs QBits
கணினி செயல்பாடுகள் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும் எல்லாருக்குமே இது தெரிந்திருக்கலாம். அதாவது, அனைவரும் பயன்படுத்தக் கூடிய சாதாரண கணினியில், பிட்கள் எனப்படும் 0 அல்லது 1 எனும் மதிப்புகளை அடிப்படையாக வைத்தே செயல்படுகின்றன. Binaray Numbers எனப்படும் இந்த எண்களை பயன்படுத்தியே நாம் உபயோகிக்கும் அனைத்து மென்பொருள்களும் இயங்குகிறது. 0 என்றால் ஒரு செயல் 1 என்றால் ஒரு செயல் என அவை வேலை செய்கிறது.
எப்படி வித்தியாசப் படுகிறது?
ஆனால் ஒரு குவாண்டம் கணினியில், அந்த வகையான செயல்பாட்டினை நீங்கள் மறந்துவிடுங்கள். சாதாரண துகள்கள் என நாம் கருதும் மூலக்கூறுகள், அணுக்கள் மற்றும் எலக்ட்ரான்கள் போன்றவை வெறும் துகள்கள் மட்டும் அல்ல. நம்மால் வரையறுக்கப்படாத வரையறுக்க முடியாத பல பண்புகளை கொண்டுள்ளன. ஒரு எலக்ட்ரான் சரியாக இங்கு உள்ளது என அதன் இடத்தை துல்லியமாக அறிய இயலாது.
பொதுவாக ஒரு எலக்ட்ரான் சுழலும் பொது “மேலே”, “கீழே” என இரண்டு நிலைகளில் இருக்கும். சாதாரண உலகில் ஒரு எலக்ட்ரானுக்கு இரண்டில் எதாவது ஒரு நிலை மட்டுமே இருக்கும். ஆனால் குவாண்டம் உலகில் ஒரே நேரத்தில் ஒரு எலக்ட்ரானால் இரண்டு நிலைகளிலும் இருக்க முடியும். இந்த நிலைக்கு பெயர் தான் “Super Position”. இதன் அடிப்படையில் தான் குவாண்டம் கணினி செயல்படுகிறது.
அடுத்து என்ன?
குவாண்டம் அறிவியலை பற்றி இவ்வளவு அறிந்தும் அதை செயல்படுத்துவது ஏன் கடினமாக உள்ளது, கூகுள், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் உண்மையிலேயே குவாண்டம் கணினியை உருவாக்கிவிட்டதா என்பன போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : குவாண்டம் கணினி பாகம் 1