மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று புதன் கிழமை தேதி 03.02.2021, நல்ல நேரம் :காலை 10.00-11.00, மாலை 4.30-5.30, ராகுகாலம் காலை 12.00-1.30, எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். கடன்கள் குறையும்.
ரிஷபம் :
குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை குறையும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம் :
உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும். வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
கடகம் :
சுபகாரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். உற்றார் உறவினர்கள் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
சிம்மம் :
குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.
கன்னி :
நீங்கள் எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று சிரமம் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் தேடி வரலாம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
துலாம் :
குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். மனைவிக்கு பொன் பொருள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
விருச்சிகம் :
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க இடையூறுகள் ஏற்படலாம். தொழிலில் புதிய மாற்றங்களை செய்து லாபத்தை அடைவீர்கள்.
தனுசு :
உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன்கள் குறையும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நற்பலனைத் தரும்.
மகரம் :
திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம் :
வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறைந்து பிரச்சினை ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிடைக்கும்.
மீனம் :
நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.




