மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று செவ்வாய் கிழமை தேதி 05.01.2020, நல்ல நேரம் :காலை 7.30 – 8.30 , மாலை 4.30 -5.30, ராகுகாலம் மாலை 3.00-4.30, எமகண்டம் காலை 9.00- 10. 30 , இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
இன்று உங்கள் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்தடையும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருள்கள் வாங்குவதற்கான தேவைகள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். வர வேண்டிய வரவுகள் உங்களை தேடி வரும்.
ரிஷபம்:
குடும்பத்தில் கணவன் மனைவி இடையே வீண் சண்டைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகை செலவிட நேரிடும். மனதை அமைதிப்படுத்த வெளியிடங்களுக்கு சென்று வருவது நல்லது. எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.
மிதுனம்:
குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் அமைதி நிலவும். தெய்வ காரியங்களுக்காக குடும்பத்துடன் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். கணவன்-மனைவி இடையே புரிதல் உண்டாகும். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது.
கடகம்:
குடும்பத்தில் குழப்பங்கள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. சிலருக்கு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் அமையும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. பணியில் உங்கள் சக பணியாளர்களால் தொல்லை ஏற்படும். பணவரவு அதிகமாக காணப்படும்.
சிம்மம்:
மகிழ்ச்சியான தருணங்கள் உங்களை மனஅளவில் திடப்படுத்தும். பணியில் உங்கள் நேர்மை குறித்து உங்கள் உயரதிகாரிகளால் பாராட்ட படுவீர்கள். தொழில் ரீதியான போட்டிகள் கடுமையாக காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்து பொறுமையுடன் செயல்படுங்கள்.
கன்னி:
பணிச்சுமை அதிகமாக இருந்தபோதிலும் குறித்த நேரத்திற்குள் பணியை முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். உங்களுக்கு கவனச்சிதறல் உண்டாகலாம் எச்சரிக்கை தேவை. எதையும் யோசித்து செயலாற்றுவது நல்லது.
துலாம்:
உங்களுக்கு கவனச்சிதறல் உண்டாகலாம் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்திற்கு நேரத்தை செலவிடுவதன் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படும். திருமண முயற்சிகளை தொடங்க அனுகூலமான நாளாகும். எதையும் யோசித்து செயல்படுவது நல்லது.
விருச்சிகம்:
நீங்கள் நிகழ்த்தும் காரியங்களில் உறவினர்கள் உறுதுணையாய் நிற்பார்கள். பிடித்த விஷயத்திற்காக பணத்தை அதிகமாக செலவு செய்து கடன்களை எதிர்கொள்வீர்கள் . இன்றைய நாளில் முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம்.
தனுசு:
உங்களின் விடாமுயற்சிகு உரிய பலன்களை பெறுவீர்கள். வெளி இடங்களில் அமைதியாக இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உங்கள் குடும்ப முன்னேற்றம் குறித்து உங்கள் மனைவியிடம் விவாதிப்பீர்கள். மனரீதியான விஷயங்களில் உங்களை சோதிக்கும் நாளாக அமையும்.
Read more – தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மகரம் :
வேலை காரணமாக வெளியூர் சென்றாலும் அந்த பணியினை தீர்க்கமாக செய்து முடிப்பீர்கள். வேலை பளு காரணமாக குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பீர்கள். உங்களின் கோபத்தால் சிலரின் மனம் காயப்படும் நிலைமை ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்பம்:
உங்கள் கடின உழைப்பிற்கான பலன் பெறுவீர்கள். வீட்டில் பிரச்சினைகள் அதிகமாக காணப்படுவதால் சிறிது கவலை அளிக்கும். வெளியூர் பயணங்களை முடிந்தவரை தவிர்த்தல் நல்லது. ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளது.
மீனம்:
பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமுடன் செயல்படுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் நேரம் செலவிட்டு அன்பை பரிமாறி கொள்ளுங்கள். எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.