மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று புதன் கிழமை தேதி 17.03.2021, நல்ல நேரம் :காலை 6.00-7.00, மாலை 4.00- 5.00, ராகுகாலம் காலை 12.00-1.30, எமகண்டம் காலை 7.30-9.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
நீங்கள் எடுக்கும் காரியங்களில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். உடன் பணிபுரிபவர்கள் உதவுவதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். வீடு மற்றும் நிலம் வாங்குவதற்க்கான வாய்ப்புகள் அமையும்.
ரிஷபம் :
உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எடுக்கும் காரியங்களில் காலதாமதம் ஏற்படும்.
மிதுனம் :
உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம் :
உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ நினைத்த சுபகாரியங்கள் கைகூடும் நாளாக அமையும்.
சிம்மம் :
உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றும்போது அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.
கன்னி :
குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
துலாம் :
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் சாதகப் பலன் உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
விருச்சிகம் :
பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.
தனுசு :
உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
மகரம் :
நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும்.
கும்பம் :
கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்து விடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும்.
மீனம் :
நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள்.




