மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று புதன் கிழமை தேதி 18.02.2021, நல்ல நேரம் :காலை 12.30-1.30, ராகுகாலம் காலை 1.30-3.00, எமகண்டம் காலை 6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் வியாபாரம் பாதிப்படையாது.குடும்ப உறவினர்களின் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது . உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நெருக்கடிகள் குறையும்.
ரிஷபம்:
கணவன்-மனைவி இடையே உண்டான உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். தொழில் மற்றும் வேலையில் இருந்த இன்னல்கள் குறைந்து உங்கள் மதிப்பு அதிகரிக்கும். குலதெய்வம் இஷ்ட தெய்வம் பிரார்த்தனை செய்து தொழிலை தொடங்கும்போது லாபம் அதிகரிக்கும்.
மிதுனம்:
குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். முடிந்தவரை பயணங்களை தவிர்ப்பது நன்மை அளிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்த்து வேலையில் கவனம் செலுத்துவது நல்லது.
கடகம்:
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். நண்பர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செலவுகள் இருந்தாலும் அதை சுபச்செலவுகளாக மாற்றிக்கொள்வது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்:
நீங்கள் எடுத்துக்கொண்ட காரியத்தை முடிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம். நிதி மற்றும் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழிலில் போட்டி பொறாமைகள் குறைந்து உங்களுக்கு சாதகமாக அமையும். கணவன்-மனைவி இடையே சில வாக்குவாதங்கள் வந்து மறையும்.
கன்னி:
தாய் தந்தையிடம் ஆலோசனை பெற்று செய்யும் காரியங்கள் நன்மை அளிக்கும். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் ஓரளவு குறைந்து சுமூகநிலை உருவாகும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களுடன் சிறு மனக்கஷ்டம் ஏற்படலாம்.
துலாம்:
உங்களின் புதிய முயற்சிகளுக்கு பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். தொலைத்தூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரலாம். உயர் கல்விக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியாகும்.
விருச்சிகம்:
உறவினர்கள் ஆதரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் நாளாக அமையும். பொழுது மற்றவரிடம் உரையாடும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. எடுத்த காரியங்கள் சில நேரம் தாமதமாகலாம்.
தனுசு:
சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். குழந்தைகளிடம் அன்பாக பேசி வருவதால் மனதிலிருந்த குழப்பம் நீங்கி மனம் மகிழ்ச்சி பெறும். பொருளாதாரம் சிறப்பானதாக காட்சி அளிக்கும்.
மகரம்:
குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வியாபாரத்தில் தடைகளை தாண்டி மற்றும் போட்டிகளை சமாளித்து முன்னேற்றம் அடைவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த சொத்து பிரச்சனை விலகி நன்மை அளிக்கும்.
Read more – சொத்துக்காக குழந்தைகளுக்கு உணவு கொடுக்காமல் சித்திரவதை
கும்பம்:
தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். பிள்ளைகள் மூலம் சுபசெலவுகள் உண்டாகலாம். தொழில் மற்றும் வேலை உங்களுடைய நேரடி பார்வையில் வைத்துக் கொள்வதால் முன்னேற்றம் அடையும்.
மீனம்:
உறவினர்கள் வழியாக நற்செய்தி ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறும். உங்கள் உடல்நிலையில் சற்று கவனம் செலுத்துவது நன்மை தரும்.




