மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று வெள்ளிக் கிழமை தேதி 19.03.2021, நல்ல நேரம் :காலை 6.00-8.00, மாலை 4.30- 5.30, ராகுகாலம் காலை 10.30-12.00, எமகண்டம் மாலை 3.00-4.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம் :
உங்களுக்கு உத்தியோக ரீதியாக எதிர்பாராத பிரச்சினைகள் ஏற்படலாம். நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில தடங்கல்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியுடன் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.
ரிஷபம் :
உங்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான சூழ்நிலை அமையும்.
மிதுனம் :
கடின உழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
கடகம் :
குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள்.உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
சிம்மம் :
நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். வியாபாரத்தில் லாபம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
கன்னி :
வேலையில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உறவினர்களிடம் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருத்தல் நல்லது. தெரியாத நபர்களிடம் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.
துலாம் :
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தியோக ரீதியாக மன உளைச்சல் உண்டாகும். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம் :
குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவ விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும்.
தனுசு :
வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வீட்டில் தொடங்கிய சுப பேச்சுக்கள் நற்பலனை அளிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
மகரம் :
குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். எதிர்பார்ப்புகள் நிறைவேற உடனிருப்பவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப் பிரச்சினைகளை சமாளிக்க முடியும்.
கும்பம் :
பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருத்தல் நல்லது. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
மீனம் :
குடும்பத்தோடு பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய கடுமையாக உழைப்பீர்கள்.