இன்று திங்கள் கிழமை,தேதி 28.09.2020, ராகுகாலம் காலை 7.30-9.00, எமகண்டம் காலை 10.30-12.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்
ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். ஆன்மீக யாத்திரை உங்களுக்கு மிகுந்த திருப்தி அளிக்கும். உணர்ச்சிவசப்படுவதை விட யதார்த்தமாக யோசிக்க வேண்டியது அவசியம்.
ரிஷபம்
இன்று உங்களிடம் பாதுகாப்பின்மை உணர்வு நிறைந்து காணப்படலாம். பிரார்த்தனையில் ஈடுபடுவது நன்மை அளிக்கும். உங்கள் மனம் தெளிவாக இருக்கும். அதன் மூலம் பல வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
மனதில் காணப்படும் வருத்தம் காரணமாக குழப்பங்கள் இருக்கலாம். பிரார்த்தனை உங்களுக்கு நன்மை அளிக்கும்.
கடகம்
இன்று உங்களிடம் நேர்மறை எண்ணங்கள் காணப்படலாம். எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் மனதை சமநிலைப் படுத்த வேண்டும்.
சிம்மம்
உங்கள் செயல்களை சுமூகமாக நடத்துவதில் நீங்கள் வெற்றி காண்பீர்கள். உங்கள் ஆர்வத்தை மேம்ப்டுத்தும் பொருட்டு முக்கிய முடிவுகளை நீங்கள் எடுப்பீர்கள்.
கன்னி
அதிக பணிகள் காரணமாக நேரம் அதிகமாக செலவாகலாம். உங்கள் பணிகளை முடிக்க இயலாமல் இருக்கும். இன்று திட்டமிட்டு பணியாற்ற வேண்டும்.
துலாம்
இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் .வழக்கமான பணிகளை ஆற்றுவதிலும் கடினமான நிலை இருக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு மிகவும் வெற்றிகரமான நாளாக அமையும். நீங்கள் மகிழ்ச்சியுடனும் உறுதியுடனும் உங்கள் செயல்களை மேற்கொள்வீர்கள். முக்கிய முடிவுகள் இன்று நன்மை அளிக்கும்.
தனுசு
இன்று கட்டுப்பாட்டை மீறும் சூழல் காணப்படலாம். என்றாலும் நீங்கள் அதிலிருந்து நன்மை பெற முயற்சிப்பீர்கள். உறுதியும் திட்டமிடலும் உங்களுக்கு வழி காட்டும்.
மகரம்
இது உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. தேவையற்ற மனக் குழப்பங்களை தவிர்ப்பது நல்லது . இன்று உங்கள் செயல்களில் மந்த நிலை காணப்படும்.
கும்பம்
இன்று சிறந்த பலன்களை அடையயலாம் . அது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.
மீனம்
இன்று உங்களுக்கு சாதகமான நாள் அல்ல. பொறுமையான அணுகுமுறை மேற்கொள்வது அவசியம். அதன் மூலம் சிறிது வெற்றி காணலாம்.




