மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..
இன்று வியாழன் கிழமை தேதி 31.12.2020, நல்ல நேரம் :காலை 10:45- 11. 45, மாலை 12.15-1.15, ராகுகாலம் மாலை 1.30-3. 00, எமகண்டம் காலை 6.00- 7. 30 , இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.
மேஷம்:
எடுத்த காரியங்களை சிரமமின்றி எளிதில் செய்து முடிப்பீர்கள். அதிக ஆற்றலுடன் காணப்படுவீர்கள். உங்களிடம் காணப்படும் தைரியம் உங்களை ஆரோக்கியமாக வைத்து இருக்கும். பணியில் உங்கள் சக பணியாளர்களால் தொல்லை ஏற்படும். பணவரவு அதிகமாக காணப்படும்.
ரிஷபம்:
பணப்புழக்கம் அதிகமாக காணப்படுவதால் அதிக அளவு செலவுகளும் உண்டாகும். பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமுடன் செயல்படுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் நேரம் செலவிட்டு அன்பை பரிமாறி கொள்ளுங்கள்.
மிதுனம்:
தொழில் ரீதியான போட்டிகள் கடுமையாக காணப்படும். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்த்து பொறுமையுடன் செயல்படுங்கள். குடும்ப உறவினர்களிடம் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வேலை பார்க்கும் நிறுவனத்தில் உங்களுக்கு மரியாதை கூடும்.
கடகம்:
வீட்டில் பிரச்சினைகள் அதிகமாக காணப்படுவதால் சிறிது கவலை அளிக்கும். வெளியூர் பயணங்களை முடிந்தவரை தவிர்த்தல் நல்லது. வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடின உழைப்பிற்கான பலன் அளிக்கும்.
சிம்மம்:
மகிழ்ச்சியான தருணங்கள் உங்களை மனஅளவில் திடப்படுத்தும். பிள்ளைகள் செய்த காரியத்தால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். பணியில் உங்கள் நேர்மை குறித்து உங்கள் உயரதிகாரிகளால் பாராட்ட படுவீர்கள்.
கன்னி:
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருத்தல் வேண்டும். உங்கள் குடும்ப முன்னேற்றம் குறித்து உங்கள் மனைவியிடம் விவாதிப்பீர்கள். வேலை காரணமாக வெளியூர் சென்றாலும் அந்த பணியினை தீர்க்கமாக செய்து முடிப்பீர்கள்.
துலாம்:
பிடித்த விஷயத்திற்காக பணத்தை அதிகமாக செலவு செய்து கடன்களை எதிர்கொள்வீர்கள் . வெளியில் செல்லும் போது குடும்ப உறுப்பினர்களிடம் இனிமையான பேச்சை வளர்த்து கொள்வது நல்லது. நீங்கள் நிகழ்த்தும் காரியங்களில் உறவினர்கள் உறுதுணையாய் நிற்பார்கள்.
விருச்சிகம்:
எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் பெறலாம். குடும்ப பெரியவர்களின் ஆரோக்கியம் குறித்தான விஷயத்தில் கவனம் தேவை.
தனுசு:
குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். பணிச்சுமை அதிகமாக இருந்தபோதிலும் குறித்த நேரத்திற்குள் பணியை முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம்.
மகரம்:
கடன் பிரச்சினைகள் குறையும். தொழில் சம்பந்தமான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.கணவன் மனைவியிடையே சிறு மனக்கசப்பு ஏற்படும்.
Read more – இந்திய அணியுடன் நாளை இணைகிறார் ரோஹித் சர்மா : 3 வது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்படுவாரா ?
கும்பம்:
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்து அதிக அளவு லாபம் பெறுவீர்கள். பணத்தை தக்க வைக்கும் திறமைகள் இருந்த போதிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினரின் வருகையால் சிறு செலவுகள் உண்டாகும்.
மீனம்:
பெற்றோர்களின் உடல் நிலையில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. வேலை பார்க்கும் நிறுவனத்தில் உங்களது கடின உழைப்பை கண்டு சகஊழியர்கள் பொறாமை கொள்வார்கள். தேவை இல்லாத கவலைகளால் பதட்டம் உண்டாகும்.