குருபகவானின் வக்ர சஞ்சாரத்தினாலும், பார்வையினாலும் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படப்போகிறது.
தேவகுரு என்று சொல்லக்கூடிய குருபகவான் ஜூலை 29ம் தேதி முதல் நவம்பர் 24ம் தேதி வரை சுமார் 4 மாத காலம் உத்தரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். இந்த சஞ்சாரத்தால் சிலரது வாழ்க்கையில் அதிர்ஷ்டங்களும், திடீர் திருப்பங்களும் ஏற்படும்.இதன்படி, மிதுனம், கடகம், சிம்மம், துலாம், மகரம் & கும்ப ராசிகாரர்களி்ன் வாழ்வில் சில திருப்பங்கள் ஏற்படும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு: பண வரவு அதிகமாக இருக்கும். வேலையில் புதிய மாற்றம் ஏற்படும்.தடைபட்டு வந்த காரியங்கள் நிறைவேறும். கணவன்,மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வாங்கியிருந்த கடன்களை அடைப்பீர்கள், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு:
ஆன்மிக பயணம் செல்வீர்கள், புது வேலை கிடைக்கும், மாணவர்கள் படிப்பில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.போட்டி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உற்சாகமாக இருப்பீர்கள்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு:
தடைபட்டு வந்த திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். கணவன்,மனைவி இடையே இருந்த மனகசப்புகள் நீங்கும். புத்திரபாக்கியம் உண்டாகும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு:
பேசுவதற்கு முன் யோசிக்கவும். நீங்கள் யதார்த்தமாக பேசினாலும் அந்த பேச்சு தவறாக புரிந்து கொள்ள நேரிடலாம். உணவு விசயத்தில் கவனம் தேவை. யோகா மற்றும் கோயிலுக்கு சென்றுவர மன அமைதி உண்டாகும்.
மகர ராசிக்காரர்களுக்கு:
புதிய முயற்சிகள் வெற்றி பெறும். அரசு வேலையில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. கூட்டுத்தொழில் செய்ய யாரேனும் முயற்சி செய்தால் அதை சற்று தள்ளிபோடுங்கள். பண விசயத்தில் கவனம் தேவை.
கும்ப ராசிக்காரர்களுக்கு:
பண வருமானம் அதிகரிக்கும். முதலீடுகளுக்கு லாபம் இரட்டிப்பாகும். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சுபசெலவுகள் ஏற்படலாம். குழந்தைகளுக்கான திருமண காரியம் கைகூடும்.
-பா.ஈ.பரசுராமன்.




