நல்ல நேரம் : காலை 7:31 – 9:00
பிரதோஷம், மாத சிவராத்திரி
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்: முயற்சியில் வெற்றி உண்டாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்,வருவாய் அதிகரிக்கும்.
ரிஷபம்: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள், எண்ணம் நிறைவேறும், நினைத்த காரியம் கைகூடும்.பழைய கடன்களை அடைப்பீர்கள். நன்மையான நாள்.
மிதுனம்: குழப்பம் அதிகரிக்கும், செயலில் தடுமாற்றம் ஏற்படலாம்.யோசித்து செயல்பட வேண்டிய நாள், புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.
கடகம்: எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். அலைச்சல் அதிகரிக்கும், பணிபுரியும் இடத்தில் சில சங்கடங்கள் உருவாகலாம்.அனுசரித்து செல்வது நல்லது.
சிம்மம்: வரவேண்டிய பணம் வந்து சேரும். தொழில் இருந்த தடைகள் விலகும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கன்னி: பணியிடத்தில் பாராட்டை பெறுவீர்கள். திட்டமிட்டு வந்த செயல் நிறைவேறும். வேலைதேடி வருபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
துலாம்: உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும், தடைகள் நீங்கும்.நண்பர்களின் முயற்சியோடு புதிய செயல் ஒன்றை தொடங்குவீர்கள்.
விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் செயலில் கவனம் தேவை.மனம் ஒருநிலையில் இல்லாமல் போகலாம். பணியிடத்தில் கவனம் தேவை.அடுத்தவரை நம்பி பொறுப்பை ஒப்படைக்காதீர்கள்.
தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வாழ்க்கை துணையுடன் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும்.புதிய முயற்சிகள் பலன் தரும். வாழ்க்கை தேவை பூர்த்தியாகும்.அனுகூலம் ஏற்படும்.
மகரம்: பொருளாதார நெருக்கடி தீரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு ஏற்படலாம்.
கும்பம்: குடும்பத்தின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொழில் முயற்சிகளில் லாபம் உண்டாகும்.
மீனம்: அலைச்சல் அதிகரிக்கும். சிறு தொந்தரவுகள் இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது. உறவினர்களால் சில சங்கடங்களை சந்திக்க வாய்ப்புண்டு.
-பா.ஈ.பரசுராமன்.