இன்று செவ்வாய் கிழமை தேதி 08.09.2020, ராகுகாலம் மாலை 3.00-4.30, எமகண்டம் காலை 9.00-10.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்
இன்று நீங்கள் ஓய்வெடுக்க முடியாத அளவிற்கு வேலை இருக்கும். அதன் காரணமாக நீங்கள் சில அசௌகரியங்களை உணர்வீர்கள்.
ரிஷபம்
இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். உங்கள் செயல்களில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். உற்சாகமாக இருப்பீர்கள் என்றாலும் தகுந்த திட்டமிடல் அவசியம்.
மிதுனம்
சிறந்த திட்டமிடலின்மை காரணமாக அவநம்பிக்கை உணர்வு எழலாம் . இதனால் உங்கள் தன்னம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது. பிரார்த்தனை மேற்கொள்வதன் மூலம் ஆறுதல் பெறலாம்.
கடகம்
இன்று முற்போக்கான வளர்ச்சி ஏற்படும் நாள். முக்கியமான முடிவுகளை நீங்கள் எடுக்கலாம். அது உங்களுக்கு தக்க பலன்களைத் தரும்.
சிம்மம்
கோவில் திருவிழாக்கள் அல்லது ஆன்மிகக் காரியங்கள் இன்று உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும்.
கன்னி
வாழ்க்கையின் சாரம் பற்றி இன்று நீங்கள் கற்பீர்கள். இஷ்ட தெய்வங்களை வணங்குதல் மற்றும் ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவதன்மூலம்; உங்கள் கவலைகளை மறக்கலாம்
துலாம்
இன்று பணிச்சுமை காரணமாக பணியின் பொழுது பொறுமையிழந்து காணப்படுவீர்கள். அதனால் அதிருப்தியுடன் காணப்படுவீர்கள்.
விருச்சிகம்
இன்று சுறுசுறுப்பு மிகுந்து காணப்படுவீர்கள். உங்களது சிறந்த அணுகுமுறைமூலம் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். இன்று வெளிப்படையாகப் பேசுவீர்கள்.
தனுசு
இன்று ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைக் பெறுவீர்கள். அதன் மூலம் இன்றைய நாளை சிறப்பானதாக ஆக்குவீர்கள். உங்கள் வாழ்க்கை தரத்ததை உயர்த்துவீர்கள்
மகரம்
இன்று நீங்கள் சில ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. எனவே இன்று திட்டமிட்டு அதன் படி செயலாற்றுங்கள்.
கும்பம்
இன்று நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். உள்ளதைக் கொண்டு வளமோடு இருப்பீர்கள். உங்கள் இனிமையான பேச்சால் பிறரை திருப்தியடையச் செய்வீர்கள்.
மீனம்
இன்று உங்கள் திறமைகள் நன்கு புரிந்து கொள்ளப்படும் உங்கள் விருப்பத்திற்கேற்றவாறு உங்கள் லட்சியங்களை அமைத்துக் கொள்வீர்கள்.




