ஆடி நிறுவனத்தின் 2021 ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் கார், சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கை தொடர்ந்து, பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அடுத்தடுத்து தங்களது புதிய வாகன மாடல்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில், ஆடி நிறுவனம் 2021 ஆர்8 பேந்தர் எடிஷன் மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு புதிய நிறத்தில் கிடைக்கும் இந்த ஸ்பெஷல் எடிஷன் ஆடி ஆர்8 ஸ்போர்ட்ஸ் கார் மொத்தம் 30 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
புதிய ஆடி ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் பிரத்யேகமாக கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்த நிறம் பேந்தர் பிளாக் க்ரிஸ்டல் எபெக்ட் பெயிண்ட் என அடையாளப்படுத்தப் படுகிறது. புதிய நிறம் தவிர பிளாக்டு அவுட் 20 இன்ச் வீல்கள், சிவப்பு நிற அக்சென்ட்களுடன் கிடைக்கிறது.
2021 ஆடி ஆர்8 ஸ்பெஷல் எடிஷன் மாடலில் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 525 பிஹெச்பி பவர், 540 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
காரின் உள்புறம் க்ரிம்சன் ரெட் மற்றும் பிளாக் நிறம் கொண்டுள்ளது. இதன் டேஷ்போர்டு, சென்டர் கன்சோல், ஸ்டீரிங் வீல் மற்றும் பக்கவாட்டில் டோர் பேனல்கள் பிளாக் மற்றும் ரெட் நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டு இருக்கிறது. இருக்கைகளும் க்ரிம்சன் ரெட் நப்பா லெதர் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது.