பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல் பைக்குகளின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்ட்டுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு சொகுசான பயணத்தை வழங்குவதில், பிஎம்டபிள்யூ நிறுவனம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில், அந்நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய, ஜி சீரிசை சேர்ந்த
இரு மாடல்கள் வெளியிடப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அந்த பைக்குகளுக்கான முன்பதிவு செப்டம்பர் மாத வாக்கில் துவங்கியது.
இந்நிலையில், பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் பிஎஸ்6 ரக ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடல்களை அக்டபோர் 8 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
ஜி 310 சீரிசுக்கு மாத தவணை முறை வசதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில், பிஎஸ்6 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விலை விவரங்கள் அக்டோபர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
முந்தைய பிஎஸ்4 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் மாடல்களின் விலை முறையே ரூ. 2.99 லட்சம் மற்றும் ரூ. 3.49 லட்சம், என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.
இரு பிஎம்டபிள்யூ மாடல்களிலும் 313சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்ட் என்ஜின் இடம்பெற்றுள்ளது. எனினும், இவற்றின் செயல்திறன் அளவுகள் பிஎஸ்4 மாடலில் இருந்ததை விட வேறுபடும் என கூறப்படுகிறது.
இந்திய சந்தையில் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் கேடிஎம் 390 டியூக் மாடலுக்கும் ஜி 310 ஜிஎஸ் கேடிஎம் 390 அட்வென்ச்சர் மற்றும் ராயல் என்பீல்டு ஹிமாலயன் மாடல்களுக்கும் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.