பிரபல கார் நிறுவனமான மசெராட்டி இரண்டு செடான் மாடல்களுக்கான டீசர்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

இரு மாடல்களும் டிரோஃபியோ மேக் ஓவர் கொண்டிருக்கும் என டீசர்களில் தெரியவந்து இருக்கிறது இதனால் கார் பிரியர்கள் குஷியில் உள்ளனர்.
முன்னதாக 2018 ஆம் ஆண்டு லெவேண்ட் டிரோஃபியோ மாடலை தொடர்ந்து கிப்ளி மற்றும் குவாட்டர்போர்ட் மாடல்கள் வி8 என்ஜினுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இவற்றில் ஃபெராரி நிறுவனத்தின் 3.8 லிட்டர் வி8 என்ஜினுக்கு மாற்றாக புதிய டர்போசார்ஜ் செய்யப்பட்ட 4.0 லிட்டர் வி8 என்ஜின் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இரு செடான்களுடன் லெவேண்ட் மாடலும் டீசரில் இடம்பெற்று இருக்கிறது. இதனால் மேம்பட்ட எஸ்யுவி மாடலில் புதிய வி8 என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. புதிய 8 சிலிண்டர் என்ஜின் சுமார் 600 பிஹெச்பி பவர் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது.
மசெராட்டி நிறுவனத்தின் இரண்டு புதிய மாடல்களும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வரும் நாட்களில் புதிய கார்களின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.