ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பிஎஸ்6 மாடலான ஸ்ட்ரீட் 750 பைக்கின் விலை இந்தியாவில் அதிரடியாக 65 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுளுக்கு முன்பு அறிமுகனான ஹார்லி டேவிட்சன் பைக் நிறுவனத்தின் தரப்பில் இருந்து வெளியான மாடல்களில் அதிகம் விற்பனையானது ஸ்ட்ரீட் 750.

அந்த வகையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் ரூ.5.34 லட்சம் மதிப்பில் புதியதாக அறிமுகம் செய்த தனது பிஎஸ்6 மாடலான ஸ்ட்ரீட் 750 பைக்கின் விலையை அதிரடியாக இந்தியர்களுக்காக குறைத்துள்ளது. அந்த வகையில் இந்த பைக்கின் தொடக்கக்க விலை இந்தியாவில் தற்போது ரூ. 4.69 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை விவிட் பிளாக் நிற மாடலுக்கு மட்டுமே குறிப்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

விவிட் பிளாக் மட்டுமின்றி பிளாக் டெனிம், விவிட் பிளாக் டீலக்ஸ், ஆரஞ்சு மற்றும் பரக்குடா சில்வர் டீலக்ஸ் போன்ற மாடல்களின் விலை ஸ்டிரீட் 750 பைக்கை காட்டிலும் ரூ. 12 ஆயிரம் வரை விலை அதிகம் ஆகும். குறிப்பிடப்பட்ட அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலையின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஹார்லி டேவிட்சன் பிஎஸ்6 மாடலான ஸ்ட்ரீட் 750 பைக்கில் 749சிசி, வி ட்வின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 3,750 rpm வேகத்தில் சுழலும்போது 60 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 233 கிலோ எடைகொண்ட இந்த பைக்கில் 13.1 லிட்டர் அளவிற்கு எரிபொருள் நிரப்பலாம்.




