கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக, அமெரிக்கர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தத் தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது.

கொரோனா என்னும் கொடிய நோய் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் மட்டும் இதுவரை 50,95,748 பேர் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டனர்.மேலும் பலி எண்ணிக்கை 1,64,104 ஆக உள்ளது.

அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமான நிலையில், அந்நாட்டு அரசு தங்கள் மக்களை வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தி தடை விதித்தது.தற்போது அங்கு கொரோனா பரவல் சற்றுக் குறைந்துள்ள நிலையில், வெளிநாடுகளுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை, அரசு நீக்கியுள்ளது.
எனினும், சீனா, இந்தியா, பாகிஸ்தான் உட்பட 50 நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் குறையாததால், அந்நாடுகளுக்கு மட்டும் தற்போது பயணம் மேற்கொள்ள வேண்டாம் என, அமெரிக்க சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.