யமஹா நிறுவனத்தின் இரு ஸ்கூட்டர் மாடல்களின் விலை இந்தியாவில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பைக் நிறுவனமான யமஹா கடந்த பிப்ரவரி மாதத்தில் பிஸ்6 ரே இசட்ஆர் 125 எஃப்ஐ மற்றும் பிஎஸ்6 யமஹா ரே இசட்ஆர் ஸ்டிரீட் ரேலி 125 எஃப்ஐ ஆகிய ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இந்த மாடல்களின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இவற்றின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
யமஹா 125சிசி ஸ்கூட்டர்களின் விலையில் 1,500 ரூபாயும், பேசினோ 125 மற்றும் ரே இசட்ஆர் 125 மாடல்களின் விலையில் 2000 ரூபாயும் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி மாற்றம் அடைந்துள்ள பைக் மாடல்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.
பேசினோ டிரம் ஸ்டான்டர்டு மாடலுக்கு 68,730 ரூபாயும், டிரம் டீலக்ஸ் மாடலுக்கு 69,730 ரூபாயும், டிஸ்க் ஸ்டேன்டர்டு வேரியண்ட் மாடலுக்கு 71, 230 ரூபாயும், டாப் எண்ட் மாடலான டிஸ்க் டீலக்ஸ் மாடலுக்கு 72,230 ரூபாயும் புதிய விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோன்று ரே இசட்ஆர் 125 டிரம் மாடல் விலை ரூ. 69, 530 எனவும், டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 72, 530 எனவும், டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 73, 530 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட மாடல்களின் அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் தரப்பட்டுள்ளது.