ஹோண்டா நிறுவனத்தின் ஹார்னெட் 2.0 பைக், இந்திய சந்தையில் பிரீமியம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹோண்டா டூ வீலர்ஸ் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஹார்னெட் 2.0 ரக பைக்கின் விலை, 1 லட்சத்து 26 ஆயிரத்து 345 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நேக்ட் ரோட்ஸ்டர் தோற்றத்தை கொண்டிருக்கும் புதிய ஹார்னெட் 2.0 எல்இடி லைட்டிங், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், மஸ்குலர் ஃபியூயல் டேன்க், ஸ்டெப்-அப் சேடிள் மற்றும் சிறிய எக்சாஸ்ட் மஃப்ளர் ஆகியவற்றை கொண்டுள்ளது. இத்துடன் செவ்வக வடிவில் எல்சிடி டிஸ்ப்ளே, ஹசார்ட் லைட் ஸ்விட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹோண்டா ஹார்னெட் 2.0 பியல் இக்னியஸ் பிளாக், மேட் சங்லியா ரெட் மெட்டாலிக், மேட் மார்வல் புளூ மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் என மொத்தம் நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் முன்புறம் அப்சைடு-டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் இரு சக்கரங்களிலும் பெட்டல்-டைப் டிஸ்க் பிரேக்குகள், சிங்கிள் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. புதிய ஹார்னெட் 2.0 ரக பைக்கில் 184சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு, ஃபியூயல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்ககப்பட்டுள்ளது. இது 16.1 Nm டார்க் செயல்திறன் வழங்குகிறது.