கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் மாடல் கார் விற்பனையகம் வர தொடங்கி உள்ளது.

கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய சொனெட் ரக கார், அந்நிறுவனத்தின் சந்தையில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கக் கூடிய காரக இருக்கும் என்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், அந்த பிராண்டின் முதல் துணை 4 மீ காம்பாக்ட் எஸ்யூவியாகவும் இந்த கார் மாறியுள்ளது.
அதிகப்படியான எதிர்பார்ப்புகளுக்கு இடையே கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் ரக கார், வரும் செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த மாடலுக்கான முன்பதிவு தொடங்கிய நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், முதல் நாளிலேயே சுமார் 6 ஆயிரம் கார்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்து இருந்தது.

இதனிடையே, புதிய கியா சொனெட் ஜிடி லைன் வேரியண்ட் விற்பனையகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சொனெட் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டி-ஜிடிஐ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. மூன்று என்ஜின்களும் BS6 தர சான்றுடன் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும், இவே அதே அளவு செயல்திறனை வழங்குகின்றன.
கியா சொனெட் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 ஸ்பீடு மேனுவல், 1.5 லிட்டர் டீசல் யூனிட் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ், டீல் யூனிட் ஆப்ஷனல் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வகையில் கிடைக்கிறது. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக். 6 ஸ்பீடு இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனிலும் கிடைக்கிறது.




