நிசான் நிறுவனத்தின் 2021 கிக்ஸ் பேஸ்லிப்ட் மாடல், சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
வெளிப்புற அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட, நிசான் நிறுவனத்தின் 2021 கிக்ஸ் பேஸ்லிப்ட் எஸ்யுவி மாடல் கார் அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களும் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
2021 நிசான் கிக்ஸ் எஸ்யுவி மாடலின் என்ஜின் அம்சத்திலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
காரின் உள்புறம் புதிதாக 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், நிசான் கனெக்டெட் தொழில்நுட்பம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டு உள்ளது.
காரின் முன்புறம் வி-மோஷன் ஹெக்சகோனல் கிரில், குரோம் சரவுண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்புற பம்ப்பரில் கிரில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதிலேயே பாக் லேம்ப்களும் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கின்றன.
காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களில் அதிகளவு மாற்றம் செய்யப்படவில்லை. எனினும், பூட்-லிட், டெயில் லைட் கிளஸ்டர் மற்றும் பின்புற பம்ப்பரில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. நிசானின் கிக்சின் முந்தைய வெர்ஷன் போன்றே 1.6 லிட்டர் கொள்ளளவு கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது.