டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர் பெப் பிளஸ் மாடல் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள், இந்திய சந்தையில் அதிகம் விற்பனை ஆகக் கூடிய ஸ்கூட்டர் வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்திய சந்தையில் ஸ்கூட்டபி பெப் பிளஸ் மாடல் – ஸ்டான்டர்டு, பபெலிசியஸ் சீரிஸ் மற்றும் மேட் எடிஷன் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்நிலையில், அதன் விலை 800 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
ஸ்கூட்டி பெப் பிளஸ் பேஸ் வேரியண்ட் விலை ரூ. 52,554 எனவும் மற்ற இரண்டு வேரியண்ட்களின் விலையும் ரூ. 53,754 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
பெப் பிளஸ் BS6 ரக ஸ்கூட்டி ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், முதல் முறையாக விலை உயர்த்தப்பட்டு உள்ளது. விலை உயர்வு தவிர ஸ்கூட்டரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த ஸ்கூட்டர் கோரல் மேட், அக்வா மேட், கிளிடெரி கோல்டு, ரிவைவிங் ரெட், ஃபுரோஸ்டெட் பிளாக், நீரோ புளூ மற்றும் பிரின்சல் பின்க் நிறங்களில் கிடைக்கிறது. இதில் 87.8சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 5.3 பிஹெச்பி பவர், 6.5Nm டார்க் செயல்திறன் வழங்குகிறது.