சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்படுவது எளிய மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆகஸ்டு மாதம் வரை வரலாறு காணாத உச்சத்தில் இருந்து வந்த நிலையில், அதன் பிறகு விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது.
இதன் காரணமாக ரூ.102க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100க்கு கீழ் வந்தது. டீசலும் அதே போல் விலை குறைந்து காணப்பட்டது. தொடர்ந்து விலை சரிந்து கொண்டே வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. பட்ஜெட் அறிவிப்பினை தொடர்ந்து பெட்ரோல் விலையில் இருந்து மூன்று ரூபாய் விலை குறைப்பும் அமலுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று பெட்ரோல் விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து மீண்டும் 100 ரூபாயை தாண்டியுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் அதிகரித்து ரூ 100.01 ஆகவும், டீசல் லிட்டருக்கு 29 காசுகள் அதிகரித்து ரூ 95.31 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை எந்த வித மாற்றமுமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையால் வாகன ஓட்டிகளும், சாமானிய மக்களும் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர்.




