சமீப காலமாக வெங்காயத்தை உரிக்காமலே கண்ணீர் வரும் சூழ்நிலையில் தற்போது உருளைக்கிழங்கு விலையும் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலங்களில் அதீத மழை காரணமாக வெங்காய சாகுபடி குறைந்துள்ளதால் தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காய விலை அதிகரித்து கிலோ ரூ.100க்கும் அதிகமாக விற்பனையாகிறது.சில இடங்களில் 150க்கும் அதிகமாக விற்கப்படுகிறது இந்நிலையில் தமிழக அரசு எகிப்து, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் வெங்காயத்தை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க ஏற்பாடுகளை செய்து வருகின்றது.
இந்நிலையில் தற்போது உருளைக்கிழங்கு விலையும் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகளுக்கு உருளைக்கிழங்கி வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. 45 கிலோ உருளைக்கிழங்கு மூட்டை விலை வழக்கமான விலையை விட ரூ.1000 விலை உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ உருளை ரூ.100 விற்று வரும் நிலையில் மேலும் விலை அதிகரிக்கலாம் என்று கூறப்படுவதால் மக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர் மேலும் பண்டிகை காலங்களில் இந்த விலையுயர்வு மக்களை சிரமத்திற்கு உள்ளாகி உள்ளது.