இந்தியாவில் ₹475 கோடி முதலீடு செய்யப்போவதாக ஓப்போ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவை சேர்ந்த ஓப்போ நிறுவனம் உற்பத்தி அமைப்பை வலுப்படுத்துவது, சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவது ஆகியவற்றிற்காக ₹475 கோடி இந்தியாவில் முதலீடு செய்யப்படும். ஏற்றுமதி திறனையும் அடுத்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 5 பில்லியன் டாலர் உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களான 5ஜி,செயற்கை நுண்ணறிவு போன்றவற்றிலும் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளோம். கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து புதிய தொழில்நுட்பத்தை கண்டறிவது போன்ற பலதிட்டங்களை முன்னெடுக்க உள்ளோம் என்றும் கூறியுள்ளது.
ஓப்போ நிறுவனம் ₹4389 கோடி ரூபாய்க்கு சுங்கவரி ஏய்ப்பு செய்ததாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் தெரிவித்தது.இந்த சூழலில் இதுபோன்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.