விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மல்லிகை பூவின் விலை ஒரு கிலோ ₹1800க்கு விற்பனையானது.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூவானது ₹1800க்கு விற்பனையானது. காலையில் குறைவான விலைக்கு விற்ற மல்லிகைப்பூ நேரம் செல்ல, செல்ல அதிகரித்தது. இதேபோல் பிச்சி பூவின் விலை ₹1200, முல்லை ₹1,000, சம்பங்கி ₹300, பட்டன்ரோஸ் ₹250க்கும் விற்பனையானது.
இந்த விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறுகையில், விநாயகர் சதுர்த்தி காரணமாக மல்லிகைப்பூவின் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. மழைக் காரணமாக வரும் நாட்களில் பூக்களின் விலை அதிகரித்தே இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.




