வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹91.50 குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்த நிலையில், 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ₹91.50 குறைக்கப்பட்டு ₹2,045 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயரும் போது டீ, காபி, டிபன் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்படுவதும், சிலிண்டர் விலை குறையும் போது உணவுப்பொருட்களின் விலை அதே நிலையில் நீடிப்பதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.




