மதுரை வட்டாரத்தில் மல்லிகைப்பூவின் விலை கிலோ ₹2300க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆடி மாதத்தில் பெய்த மழைக்காரணமாக மல்லிகைப் பூக்கள் பூத்து குலுங்கின. வரத்து அதிகரிப்பால் கிலோ ₹200க்கு விற்கப்பட்டது. ஆவணியில் மல்லிகைப்பூவின் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ₹1,000ஐ தாண்டியது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மல்லிகைப் பூக்கள் தரம் வாரியாக, கிலோ ₹1500 முதல் ₹1800வரை விற்கப்பட்டது. செண்ட் தொழிற்சாலையில் கிலோ ₹70க்கு மேல் வாங்காத நிலையில், தற்போது கிலோவுக்கு ₹250 என விலை நிர்ணயித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று வரத்து குறைந்த நிலையில் மல்லிகைப்பூ கிலோ ₹2300க்கு விற்பனையானது. இதேபோல் பிச்சுப்பூ, முல்லைப்பூக்களின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. இப்பூக்கள் கிலோ ₹500க்கு விற்பனையானது. சம்பங்கி கிலோ ₹250க்கும், அரளிப்பூ கிலோ ₹300க்கும் விற்பனையானது