உள்நாட்டு சந்தையில் குறிப்பிட்ட வகை உதிரி பாகங்கள் போதிய அளவு இல்லை , வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழல் இருப்பதால் விலையேற்றம் தவிர்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன்களின் விலை 3 சதவீதம் வரை உயர வாய்ப்பு இருப்பதாக , இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கூட்டமைப்பின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிவிப்பில், உள்நாட்டு சந்தையில் குறிப்பிட்ட வகை உதிரி பாகங்கள் போதிய அளவு இல்லை என்பதாலும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழல் இருப்பதாலும் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சூழலில் டிஸ்பிளே அசெம்ப்ளிக்கான இறக்குமதி வரி 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாலும், மொபைல் போன்களின் விலை 1.5 முதல் 3 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.